செய்திகள்

வேலூரில் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை

மகள் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை கட்டிட மேஸ்திரி கண்டித்துள்ளார். தன் மகளை கண்டித்துவிட்டோமே என்று மனம் வருந்திய அவர் தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

வேலூர்:

வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் தெள்ளூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது44). கட்டிட மேஸ்திரி.

இவருக்கு 1 மகன் 1 மகள் உள்ளனர். நேற்று தனது மகள் செல்போனில் வெகு நேரமாக பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனை கண்ட புருஷோத்தமன் தன் மகளை கண்டித்து அடித்துள்ளார்.

பின்பு நேற்று இரவு தன் மகளை அடித்து விட்டோமே என்று மனம் வருந்தி தன் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து வந்த விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குரு பாதம் விசாரணை நடத்தி வருகிறார்.