செய்திகள்

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்களின் ஊதியத்தை உயர்த்தி பட்ஜெட்டில் அறிவிப்பு

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர்களின் ஊதியம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதோடு, எம்.பி.க்களின் ஊதியம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #Budget2018 #UnionBudget2018

மாலை மலர்

புதுடெல்லி:

2018-19-ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

ஜனாதிபதியின் தற்போதைய மாத ஊதியம் ரூ.1.50 லட்சமாக உள்ளது, இது ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். துணை ஜனாதிபதியின் மாத ஊதியம் தற்போது ரூ.1.25 லட்சமாக உள்ளது, இது ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். மாநில கவர்னர்களின் மாத ஊதியம் தற்போது ரூ.1.10 லட்சமாக உள்ளது. இது, ரூ.3.50 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்க குழு ஏற்படுத்தப்படும். விலைவாசி உயர்வு உள்பட பல அம்சங்களுக்கு ஏற்ப ஊதியம் மாற்றி அறிவிக்கப்படும்.

இவ்வாறு பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அதில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதைய நிலையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Budget2018 #UnionBudget2018