செய்திகள்

விமான நிலையங்களின் எண்ணிக்கை 5 மடங்காக உயர்த்தப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு

நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 5 மடங்காக உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #Budget2018 #UnionBudget2018

மாலை மலர்

புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று 2018-19ஆம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் விமான நிலைய ஒழுங்குமுறை ஆணையத்தின் வசம் தற்போது 124 விமான நிலையங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கை 5 மடங்காக உயர்த்தப்படும். ஆண்டுக்கு ஒரு பில்லியன் பயணங்கள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகளை அதிகரிக்கும் வகையில் விமான நிலையங்களின் கையாளும் திறன் மேம்படுத்தப்படும்.

பயன்பாட்டில் இல்லாத 56 விமான நிலையங்கள் மற்றும் 31 ஹெலிபேடுகள் உதான் திட்டம் மூலம் இணைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். #Budget2018 #UnionBudget2018 #tamilnews