செய்திகள்

பத்காம் என்கவுண்டர் - போலீசாரால் தேடப்பட்ட நவீத் ஜாட் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் போலீசாரால் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி நவீத் ஜாட் உள்ளிட்ட 2 பேர் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டனர். #JKEncounter #NaveedJattGunnedDown

ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் உள்ள குத்போரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை இன்று காலையில் சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

SCROLL FOR NEXT