செய்திகள்

புச்சிபாபு கிரிக்கெட்: தமிழக அணி 200 ரன்னில் ஆல்-அவுட்

புச்சிபாபு கோப்பைக்கான இறுதி போட்டியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன்-ஐதராபாத் அணிகள் மோதின. இதில் தமிழக அணி 200 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

சென்னை:

புச்சிபாபு கோப்பைக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று தொடங்கிய இறுதிப்போட்டியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன்-ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணி 56.1 ஓவர்களில் 200 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 45 ரன்னும், பாபா அபராஜித் 38 ரன்னும் எடுத்தனர். ஐதராபாத் அணி தரப்பில் சுதீப் தியாகி, ரவிகிரண், மெஹ்தி ஹசன், ஆகாஷ் பண்டாரி தலா 2 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. இன்று 2-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

SCROLL FOR NEXT