செய்திகள்

உ.பி. மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க. முறைதவறி வென்றுள்ளது - பகுஜன்சமாஜ் குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க. முறைதவறி வென்றுள்ளது என பகுஜன்சமாஜ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். #RajyaSabhaElections

லக்னோ:

பாராளுமன்றத்தில் காலியாக உள்ள மாநிலங்களை எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேசம் - 10, மேற்கு வங்காளம் 5, கர்நாடகம் 4, தெலுங்கானா 3, ஜார்க்கண்ட் - 2, சத்தீஸ்கர் என மொத்தம் 25 எம்.பி.க்கள் இடங்களுக்கான தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க. 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களில் பா.ஜ.க. சார்பில் அருண் ஜெட்லி, அனில் ஜெயின், நரசிம்ம ராவ், விஜய் பால் தோமர், கந்தா கர்தாம், அஷோக் பாஜ்பாய், ஹர்நாத் யாதவ், சகல்தீப் ராஜ்பர், அனில் அகர்வால் உள்பட 9 பேர் வெற்றி பெற்றனர். சமாஜ்வாதி சார்பில் ஜெயா பச்சன் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க. முறைதவறி வென்றுள்ளது என பகுஜன்சமாஜ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக சமாஜ்வாடி கட்சியினர் கூறுகையில், பா.ஜ.க.வினர் ஆட்சி அதிகாரம் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி இந்த தேர்தலில் வென்றுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளனர். #RajyaSabhaElections #TamilNews