ஆர்ப்பாட்டம் 
செய்திகள்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூரில் அகில இந்திய பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயீஸ் அசோசியேசன் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாலை மலர்

கரூர்:

கரூரில் அகில இந்திய பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயீஸ் அசோசியேசன் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். 4ஜி சேவையை மேம்படுத்த வேண்டும், உரிய தேதியில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.