செய்திகள்

பிஎஸ்என்எல் சம்பள பிரச்சினை - மு.க.ஸ்டாலின் கண்டனம்

பி.எஸ்.என்.எல். சம்பள பிரச்சினை தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். #BSNL #MKStalin

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது.

1.70 லட்சம் ஊழியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தனியார் செல் நிறுவனங்களை தாங்கிப்பிடிக்கும் மத்திய அரசு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தகர்த்துக் கொண்டிருப்பது ஏன்?

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.  #BSNL #MKStalin

SCROLL FOR NEXT