செய்திகள்

எல்லையில் பாக். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இந்திய வீரர் மரணம்

காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் தபான் மோண்டல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் தபான் மோண்டல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி இந்திய பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இன்று காலை சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து பாகிஸ்தான் ரேஞ்சர்கள் தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் தபான் மோண்டல் என்பவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மாலையில் மரணமடைந்தார்.