ஸ்ரீநகர்:
காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரா அருகே இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக இன்று அதிகாலை ஒரு மர்ம நபர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றான். இதை கவனித்துவிட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அவனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
பாகிஸ்தானில் உள்ள சிலாகோட் பகுதியை சேர்ந்த அந்த நபரின் பெயர் அலி ராஜா என்பதும் அங்குள்ள பஸ்ரூர் பகுதியில் டெய்லராக வேலை செய்பவன் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.