சென்னை:
சென்னை அரும்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களிடையே இன்று மோதல் ஏற்பட்டது, பேருந்தில் இருந்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சில மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மாணவர்களை அங்கு பதிவான சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் பட்டப்பகலில் மாணவர்கள் இடையிலான மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது.