சென்னை:
தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்கள் பதிவு செய்வது, சொத்துக்களை கைமாற்றுவது, வில்லங்க சான்றிதழ் பெறுவது, திருமண பதிவு ஆகிய பணிகள் நடக்கின்றன. இதில், சொத்துக்களை பதிவு செய்யும் போது இடைத்தரகர்கள் தலையீடு செய்வதாக நீண்ட காலமாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது.
இதனையடுத்து, வரும் மார்ச் மாதம் முதல் சார்பதிவாளர் அலுவலகங்களில் சொத்துக்களை வாங்குபவர், விற்பவர் தவிர மற்றவர்கள் உள்நுழைய கூடாது என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை மீறி இடைத்தரகர்கள் தலையிட்டதாக புகார் எழுந்தால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.