லண்டன்:
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 190-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இதற்கிடையில், ஐரோப்பிய நாடான இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இங்கிலாந்தில் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத் துறை மந்திரி மாட் ஹான்காக்குக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டரில் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.