ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் - அமெரிக்காவின் ரியான் ஹாரிசன் பலப்பரீட்சை நடத்தினார்கள்.
இதில் கிர்ஜியோஸ் 6-4, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். கிர்ஜியோஸ் அரையிறுதியில் உலகத்தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் டிமிட்ரோவை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிர்ஜியோஸ் சொந்த மண்ணில் வாங்கும் முதல் ஏடிபி பட்டம் இதுவாகும். #BrisbaneInternational #Nick Kyrgios #Ryanharrison