சென்னை:
சென்னையில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த மாதம் ரூ.100 வரை விற்கப்பட்ட 1 கிலோ தக்காளி இப்போது 45 ரூபாய்க்கு விலை குறைந்து விட்டது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி பகுதியில் இருந்து அதிக அளவில் தக்காளி வருவதால் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.
இன்னும் 10 நாளில் மதுரை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து தக்காளி வர இருப்பதால் மேலும் விலை குறையும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஆனால் இப்போது ஆடி மாதம் என்பதால் கத்தரிக்காய், வாழைக்காய், முருங்கைக்காய், கீரைத்தண்டு விலை கிடுகிடுவென 2 மடங்கு உயர்ந்து விட்டது.
உஜாலா கத்தரிக்காய் 1 கிலோ ரூ.80க்கு விற்கப்படுகிறது. வரி கத்தரிக்காய் ரூ.60 முதல் ரு.70 வரை விற்பனையாகிறது.
கடந்த வாரம் வரை வாழைக்காய் 7 ரூபாய்க்கு கிடைத்தது. ஆனால் இப்போது 1 வாழைக்காய் ரூ.12 முதல் 15 வரை விற்கப்படுகிறது. 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட கீரைத்தண்டு இப்போது 10 ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளது. முருங்கைக்காய் 1 கிலோ 30 ரூபாயில் இருந்து 55 ரூபாய்க்கு விலை அதிகரித்துள்ளது.
பெரிய வெங்காயம் கோஸ், உருளைக்கிழங்கும் 1 கிலோ 25 ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளது.