செய்திகள்

தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பி.சி.சி.ஐ கொண்டு வரவேண்டும் - சட்ட ஆணையம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தை தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என மத்திய சட்ட கமிஷன் சுப்ரீம் கோர்ட்டில் பதிலளித்துள்ளது.

புதுடெல்லி:

பொதுநல வழக்கு ஒன்றில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தை கொண்டு வருவது தொடர்பாக பதிலளிக்க மத்திய சட்ட ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக சட்ட ஆணையம் தனது பதிலை இன்று தாக்கல் செய்துள்ளது. அதன்படி, அரசின் கீழ் செயல்படும் மற்ற வாரியங்களை போல, பிசிசிஐ.யும் கருத வேண்டும். எனவே, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அந்த அமைப்பை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #BCCI #RTI #TamilNews

SCROLL FOR NEXT