மாயம் 
செய்திகள்

மூன்றடைப்பு அருகே புதுமாப்பிள்ளை திடீர் மாயம்

மூன்றடைப்பு அருகே புதுமாப்பிள்ளை திடீரென மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரைதேடி வருகிறார்கள்.

மாலை மலர்

நெல்லை:

மூன்றடைப்பு அருகே உள்ள கோவைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் அய்யனார் (வயது28). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அய்யனார் கோவிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல்கள் கிடைக்க வில்லை. இதனால் அவரது தந்தை சந்தானம் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனாரை தேடி வருகிறார்கள்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவர் காணாமல் போனாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடந்து வருகிறது.