லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் செங்கல் சூளை உரிமையாளர் இன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர்நகர் மாவட்டத்தில் செங்கல் சூளை நடத்திவரும் அந்நபர் இன்று காலை மோர்னா-போக்கஹேரி சாலை வழியாக தனது சூளைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அவரை வழிமறித்து சுட்டுக் கொன்றதாக போப்பா பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.