நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடிய டெய்லர் தற்போது இங்கிலாந்தில் இருந்து திரும்பி, மீண்டும் ஜிம்பாப்வே அணியில் இணைந்துள்ளார். இதை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. 2017 சீசன் வரை அவரது ஒப்பந்தம் உள்ளது. இருந்தாலும் நாட்டிங்காம்ஷைர் அணியில் இருந்து ஜிம்பாப்வே திரும்ப விரும்பினார். அவரது விருப்பத்திற்கு அனுமதி கிடைத்ததால் சொந்த நாடு திரும்புகிறார்.
ஜிம்பாப்வே அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அக்டோபர் மாதத்தில் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடரின்போது பிராண்டன் டெய்லர் களம் இறங்க வாய்ப்புள்ளது.