ரஷித் கான், முகமது நபி 
செய்திகள்

பிராவோ, ரஷித் கான், முகமது நபி ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தனர்

கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடிய முன்னணி வீரர்களான வெயின் பிராவோ, ரஷித் கான், முகமது நபி ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தனர்.

ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபு தாபி, ஷார்ஜாவில் நடக்கிறது. வருகிற 19-ந்தேதி போட்டி தொடங்குகிறது.

டி20 லீக்கில் விளையாடும் முக்கியமான வீரர்கள் கரீபியின் பிரிமீயர் லீக்கில் பங்கேற்றார்கள். இதனால் முன்னதாக அணியுடன் இணைய முடியவில்லை. தற்போது போட்டி முடிந்ததால் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற வண்ணம் உள்ளனர்.

இன்று காலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இம்ரான் தாஹிர் சென்றடைந்தார். இந்நிலையில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர்களான ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், முகமது நபி ஆகியோரும் சென்றடைந்துள்ளனர்.

அவர்கள் அணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டலில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் அணியுடன் இணைந்து போட்டியில் விளையாடுவார்கள்.

SCROLL FOR NEXT