பிரமோஸ் ஏவுகணை 
செய்திகள்

ஒடிசாவில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

ஒலியின் வேகத்தை விட அதிவேகமாக செல்லும் பிரமோஸ் ஏவுகணை ஒடிசா ஏவுகணை தளத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

மாலை மலர்

புவனேஸ்வர்:

பிரம்மோஸ் ஏவுகணை என்பது நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், போர் விமானங்கள் அல்லது நிலத்திலிருந்து ஏவக்கூடிய ஒரு நடுத்தர தூர ராம்ஜெட் சூப்பர்சோனிக் (ஒலியின் வேகத்தை விட அதிவேகமாக செல்லக்கூடிய) ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணையின் தரம் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. 

இந்நிலையில், நிலப்பரப்பில் இருந்து நிலப்பரப்பில் உள்ள இலக்குகளை தாக்கக்கூடிய பிரமோஸ் ஏவுகணை சோதனை ஒடிசாவின் சந்திப்பூர் ஏவுதளத்தில் இன்று காலை 8.30 மணியளவில் நடத்தப்பட்டது. 

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்ந்தது, எதிர்பார்த்த அனைத்து அளவுருக்களையும் பூர்த்திசெய்தது என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.