புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டை வளாகத்தில் உள்ள கிணற்றை சுத்தம் செய்த போது கையெறி குண்டு ஒன்று கிடந்தது. தொல் பொருள் ஆய்வாளர்கள் இதை கண்டு பிடித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். தேசிய பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் அந்த கையெறி குண்டை மிகவும் கவனத்துடன் அப்புறப்படுத்தியது.
டெல்லி செங்கோட்டையில் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு குறித்த பீதி ஏற்பட்டது. நாசவேலைக்கு திட்டமிட்டு இந்த கையெறி குண்டு வைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தபட்டுள்ளது.