செய்திகள்

போடி அருகே அனுமதியின்றி மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்

போடி அருகே அனுமதியின்றி மணல் கடத்தியது தொடர்பாக டிராக்டர் மற்றும் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே ஆற்று படுகையில் இருந்து தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருவதால் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

தாசில்தார் ஆர்த்தி தலைமையில் வருவாய் ஆய்வாளர் சுந்தர்ராஜ் மற்றும் வருவாய்த்துறையினர் பொட்டிபுரம் மற்றும் பூதிப்புரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது மின்னல் வேகத்தில் வந்த 2 லாரிகளையும் ஒரு டிராக்டரையும் மடக்கி சோதனை நடத்தினர். அவர்கள் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து லாரிகளையும், டிராக்டரையும் மணலுடன் பறிமுதல் செய்த அதிகாரிகள் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். லாரி உரிமையாளர் ராஜசேகர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

SCROLL FOR NEXT