பிரெசில்லா:
பிரேசில் நாட்டில் 70 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் வடக்குப் பகுதியில் உள்ள பார் மாநிலத்தில் 70 பயணிகளுடன் படகு சென்று கொண்டிருந்தது. ஆற்றின் நடுவே சென்று கொண்டிருந்தபோது திடீரென படகு விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர்.
உடனடியாக அங்கு வந்த மீட்புப்படையினர் தத்தளித்த பயணிகளில் 25 பேரை மீட்டுள்ளனர். 7 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படகு விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.