செய்திகள்

மும்பையில் படகு கவிழ்ந்து விபத்து - எம்.எல்.ஏ. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

மராட்டிய மாநிலத்தின் மும்பையில் உள்ள மத் தீவில் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில், அதில் பயணம் செய்த எம்.எல்.ஏ. உள்பட 15 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மும்பை:

மராட்டிய மாநிலத்தின் மும்பையில் உள்ள மத் தீவில் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில், அதில் பயணம் செய்த எம்.எல்.ஏ. உள்பட 15 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மராட்டிய மாநிலத்தின் மும்பையில் மத் தீவு அமைந்துள்ளது. சுற்றுலா பகுதியான இந்த தீவில் உள்ள தர்காவுக்கு நேற்று அஸ்லம் ஷேக் எம்.எல்.ஏ. உள்பட சிலர் ஒரு படகில் சென்று வந்தனர்.

தர்காவில் வழிபாடு முடிந்து அவர்க்ள் தீவை நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். அப்போது படகு திடீரென கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த அனைவரும் கடலில் விழுந்தனர்.

தகவலறிந்து பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கடலில் விழுந்த எம்.எல்.ஏ.  உள்பட அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஸ்லம் ஷேக் எம்.எல்.ஏ. மராட்டிய மாநிலம் ம்லாட் மேற்கு தொகுதியின் சட்டசபை உறுப்பினராக தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.