செய்திகள்

லண்டன் சுரங்க ரெயிலில் வெடி விபத்து- பலர் காயம்

லண்டன் நகரின் தென்மேற்கு பகுதியில் இன்று டியூப் டிரெயினில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன் நகரின் சில பகுதிகளை இணைக்கும் வகையில் பூமிக்கு அடியில் செல்லும் சுரங்க ரெயில் (டியூப் டிரெயின்) சேவை இயங்கி வருகிறது.

இன்று காலை வழக்கம்போல் இந்த ரெயிலில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். (உள்ளூர் நேரப்படி) காலை 8.20 மணியளவில் பார்சன்ஸ் கிரீன் நிலையத்தை நெருங்கியபோது ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த வெடி குண்டு பயங்கரமாக வெடித்து சிதறியது.

SCROLL FOR NEXT