கீ2 ஸ்மார்ட்போனின் பாதுகாப்பான மென்பொருள், மற்றும் கீபோர்டு ஸ்மார்ட்போனினை பயன்படுத்த சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. எனினும் இது போட்டி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களை விட விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனின் விலை குறைவாக நிர்ணயம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் பிளாக்பெரி கீ2 எல்.இ. என்ற பெயரில் FCC தளத்தில்: BBE100-1 (சிங்கிள் சிம்) மற்றும் சர்வதேச சந்தைகளில் BBE100-4 (டூயல் சிம்), BBE100-2 (சிங்கிள் சிம்) மற்றும் அமெரிக்க சந்தைகளில் BBE100-5 (டூயல் சிம்) மற்றும் BBE100-3 பெயர்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் லூனா என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்துடன் 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளே, 4 அடுக்கு க்வெர்டி பேக்லிட் கீபோர்டு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பிளாக்பெரி கீ2 எல்.இ. மாடலில் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 4 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்றும் 13 எம்பி + 5 எம்பி டூயல் பிரைமரி கேமராக்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.