செய்திகள்

பீகார் பபுவா சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜ.க ஆறுதல் வெற்றி

பீகாரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பபுவா சட்டசபை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ரிங்கி பாண்டே வெற்றி பெற்றுள்ளார். #Biharbypoll #bjp

பாட்னா:

பீகார் மாநிலத்தில் உள்ள ஆராரியா மக்களவை தொகுதி மற்றும் ஜகானாபாத், பபுவா ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 11 தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதீய ஜனதா கூட்டணி மற்றும் கூட்டணி எதிர்க்கட்சிகளான ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், இந்த மூன்று தொகுதி இடைத்தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தன.

அராரியா மக்களவை தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் முன்னிலையில் உள்ளது. ஜெஹானாபாத் சட்டசபை தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் வேட்பாளர் சுதய் யாதவ் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பாபுவா சட்டசபை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ரிங்கி ராணி வெற்றி பெற்றுள்ளார். அவர் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஷாம்பு சிங் படேலை தோற்கடித்துள்ளார். #Biharbypoll #bjp #Tamilnews

SCROLL FOR NEXT