செய்திகள்

நாமக்கல்லில் பா.ஜனதா இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க வலியுறுத்தி நாமக்கல்லில் பா.ஜனதா இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல்:

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க வலியுறுத்தியும், குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி தரும் நவோதயா பள்ளிகளை எதிர்க்கும் தி.மு.க.வை கண்டித்தும் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜேஸ்குமார் தலைமை தாங்கினார். பா.ஜனதா மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமார், இளைஞர் அணி பொதுச்செயலாளர்கள் தர்மராஜ், கனகராஜ், வக்கீல் குப்புசாமி, நகர தலைவர் வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

SCROLL FOR NEXT