செய்திகள்

அரசியல் பகை - அரியானாவில் பா.ஜ.க. தொண்டர் சுட்டுக் கொலை

அரியானா மாநிலத்திம் அம்பாலா மாவட்டத்தில் அரசியல் பகை காரணமாக பா.ஜ.க. தொண்டர் இன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. #AmbalaBJPworker #shotdead

சண்டிகர்:

அரியானா மாநிலத்தின் அம்பாலா மாவட்டத்துக்குட்பட்ட டோப்கானா பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் கோயல். பா.ஜ.க.வின் தீவிர தொண்டரான இவருக்கு சமீபகாலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக இவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர். ஆனால், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது வீட்டு வாசலில் சஞ்சய் கோயல் இன்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் விஜய் சர்மா அவரை கொன்றுவிட்டு தப்பியோடி விட்டதாகவும், அவரது குடும்பத்தார் போலீசில் தற்போது புகார் அளித்துள்ளனர்.

சஞ்சய் கோயலின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். #AmbalaBJPworker #shotdead 

SCROLL FOR NEXT