செய்திகள்

உ.பி. உள்ளாட்சி தேர்தல்: 14 மேயர் பதவிகளை அள்ளிய பா.ஜ.க - 2 இடங்களில் பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் வெற்றி

உ.பி. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் 16-ல் 14 மேயர் பதவிகளை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது. மீதியுள்ள 2 இடங்களில் பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 16 பெருநகரங்கள், 198 நகரசபைகள், 438 பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்றன.

அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட நிலையில் அயோத்தி, மதுரா-பிருந்தாவனம், மொராதாபாத், கான்பூர், பிரோஸாபாத், வாரணாசி, கோரக்பூர், லக்னோ, சஹரான்பூர், ஜான்சி, அலகாபாத், ஆக்ரா, காசியாபாத், பரேலி ஆகிய பெருநகரங்களின் மேயர் பதவிகளை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.

மீரட் மற்றும் அலிகார் பெருநகரங்களின் மேயர் பதவிகளை மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் பிடித்துள்ளனர்.

அம்மாநிலத்தை முன்னர் ஆண்ட சமாஜ்வாதி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் மேயர் பதவிக்கான ஒரு இடத்தில்கூட  வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT