செய்திகள்

கர்நாடக அரசை கவிழ்க்க மாட்டோம் - எடியூரப்பா உறுதி

கர்நாடக அரசை கவிழ்க்கப் போவதில்லை என்பதால் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் கவலைப்படத் தேவையில்லை என மாநில பா.ஜ.க தலைவரான எடியூரப்பா தெரிவித்துள்ளார். #Yeddyurappa

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தின் பாஜக தலைவராக இருந்து வருபவர் எடியூரப்பா. இவர் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டெல்லியில் இருந்து எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு திரும்பியுள்ளனர். நாங்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளோம். அப்போது வறட்சி நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். 

கர்நாடக அரசை சீர்குலைக்கும் எந்த வேலையிலும் நாங்கள் ஈடுபடப் போவதில்லை. எனவே, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் கவலை கொள்ளத் தேவையில்லை. நாங்கள் எதிர்க்கட்சியாக செயல்பட உள்ளோம் என தெரிவித்தார்.

எடியூரப்பாவின் முடிவை வரவேற்கிறேன் என முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா குறிப்பிட்டுள்ளார். #Yeddyurappa

SCROLL FOR NEXT