அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. வரைவு பட்டியலில் விடுபட்டவர்கள், பெயர்களை சேர்ப்பதற்காக கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இறுதி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில், 3.11 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன.
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் விடுபட்டவர்கள், தங்கள் இந்திய குடியுரிமையை நிரூபிக்க, உரிய ஆவணங்களுடன் வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.