செய்திகள்

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியவையும் ஒருவகையில் தீவிரவாத இயக்கங்கள்: கர்நாடக முதல் மந்திரி நேரடி தாக்கு

ஒருவகையில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகியவையும் தீவிரவாத இயக்கங்கள்தான் என கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா இன்று குறிப்பிட்டுள்ளார். #Siddaramiah #bjp

பெங்களூரு:

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகருக்கு வந்த முதல் மந்திரி சித்தராமையா செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். பா.ஜ.க. பிரமுகர் தீபக் ராவ் கொலை வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா இயக்கத்தை கர்நாடக அரசு இன்னும் தடை செய்யாதது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மேற்படி கொலை வழக்கு தொடர்பாக மேலும் சில உண்மையான தகவல்களுக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டார்.

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், விஸ்வ ஹிந்து பரிஷத் அல்லது எந்த அமைப்பாக இருந்தாலும் சமூகத்தில் அமைதியின்மையை உண்டாக்குவதை சகித்துக்கொள்ள முடியாது. 

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் ஆகியவையும் ஒருவகையில் தீவிரவாத/ பயங்கரவாத இயக்கங்கள்தான். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா ஆகட்டும். ஆர்.எஸ்.எஸ். அல்லது பஜ்ரங்தள் ஆகிய இயக்கங்கள் ஆகட்டும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் இந்த அரசு விட்டுவைக்காது என்றும் அவர் தெரிவித்தார். #tamilnews #bjp #Siddaramiah

SCROLL FOR NEXT