பெங்களூரு:
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு நடைபெற்றுவரும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான இரண்டாவது குற்றப்பத்திரிகை புத்தகத்தை அம்மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார்.
கர்நாடக மாநிலத்தில் சித்தராமய்யா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையும், ரவுடிகள் ராஜ்ஜியம் அதிகரித்து வருவதையும் இந்த புத்தகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரி அனுராக் திவாரி மற்றும் தாசில்தார் சங்கரய்யா ஆகியோர் மணல் கொள்ளை மாபியா கும்பலால் கொல்லப்பட்ட சம்பவமும் இதில் இடம்பெற்றுள்ளது.
கோப்பு படம்
அரசின் முடிவுக்கு எதிரான போக்கை கடைபிடித்த அதிகாரிகள் ஆட்சியாளர்களால் பழிவாங்கப்பட்டனர். மருத்துவமனை ஊழலில் முதல் மந்திரியின் மகன் நேரடியாக ஈடுபட்டுள்ளார். தலித் மாணவ-மாணவியர் விடுதிகளுக்கு வாங்கப்பட்ட மெத்தை, தலையணை கொள்முதலிலும் ஊழல் நடைபெற்றுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் பா.ஜ.க.வை பதவியில் அமர்த்தினால் ஊழலற்ற நல்லாட்சியை வழங்குவோம். தவறுக்கு எதிராக குரல் எழுப்பும் அரசு அதிகாரிகள் பரிசளித்து, கவுரவிக்கப்படுவார்கள் என்றும் பா.ஜ.க.. சார்பில் இன்று வெளியிடப்பட்ட குற்றப்பத்திரிகை புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews #chargesheet #bjp #siddaramaiah