மத்தியபிரதேச மாநிலத்தின் போபால் நாடாளுமன்ற தொகுதியின் பாஜக எம்.பி பிரக்யா சிங். சமீபத்தில் போபால் தொகுதிக்கு உட்பட்ட செகோர் பகுதியில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது போபால் தொகுதியைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர், தனது பகுதியில் சுகாதாரமற்று இருக்கும் நிலை குறித்து பிரக்யா சிங்கிடம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பிரக்யா, 'உங்களது கழிவறைகளை சுத்தம் செய்ய நான் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அது என் வேலை அல்ல.
அதை தயவுசெய்து புரிந்து கொள்ளவும். நான் எந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டேனோ அதனை நேர்மையாக செய்வேன். ஒரு எம்.பி-யாக, மக்களின் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ, கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்களோடு இணைந்து தொகுதியின் வளர்ச்சிக்காக பணி செய்ய வேண்டும்.
பாஜக தொண்டர்களுக்கிடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சுக்கு பாஜக தேசிய செயல் தலைவர் ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரக்யா ஏற்கனவே, தேச தந்தையான மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை, ‘தேச பக்தர்' என்று புகழ்ந்தார்.