பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜனதா தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் சந்தேஷ்காளி பகுதியில் நேற்று இரவு பா.ஜனதா - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது.
வன்முறையில் பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் இன்று பாஜக சார்பில் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பாசிர்ஹத் துணைக் கோட்டத்தில் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும், இன்று கருப்பு தினமாகவும் அனுசரிக்கப்பட்டது.