செய்திகள்

பெரம்பலூர் மாவட்ட பா.ஜனதா புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதலுடன், பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர்:

தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதலுடன், திருச்சி கோட்ட பொறுப்பாளர் எம். சிவசுப்ரமணியம், இணை பொறுப்பாளர்கள் இல. கண்ணன், சிவசாமி, திருச்சி கோட்ட அமைப்பு செயலர் பெரியசாமி ஆகியோர் பரிந்துரையின் பேரில், மாவட்டத் தலைவர் சாமி. இளங்கோவன் பெரம்பலூர் மாவட்ட புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.

அதன்படி, மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக ராமலிங்கம், சுப்ரமணியம், மாவட்ட துணைத் தலைவர்களாக கண்ணன், சிவசங்கரன், ராஜேந்திரன், சிவராமன், சாந்தி, தனலட்சுமி, வனஜா, அசோகன், மாவட்ட பொது செயலர்களாக அடைக்கலராஜ், சாமிநாதன், இளங்கோவன், ராஜேந்திரன், மாவட்ட செயலர்களாக தனபால், குருராஜேஷ், பால வெங்கடேஷ், ராஜா ராம், அறிவழகன், முத் தமிழ் செல்வன், வாசுகி, சிவகாமி ஆகியோர் நியமிக் கப்பட்டுள்ளனர்.மேலும், மண்டலத் தலைவர்களாக முருகேசன், கலைசெல்வன், கண்ணன், மகாமூர்த்தி, இளங்கோவன், ராமராஜ், மாவட்ட அணி தலைவர்களாக லெட்சுமி (மகளிர்), வேலுசாமி (இளைஞர்), சுரேஷ்குமார் (எஸ்.சி. அணி), அல்லாபாட்ஷா (சிறுபான்மை), ஆதிமூலம் (விவசாயம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT