செய்திகள்

மூன்று மக்களவை தொகுதிகளிலும் பா.ஜ.க தோல்வி - சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி கட்சிகள் வெற்றி

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், புல்புர் தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியும், பீகாரின் அராரியா தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் பா.ஜ.க.வை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. #Gorakhpur #Phulpur

மாலை மலர்

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர், புல்புர் மற்றும் பீகார் மாநிலம் அராரியா மக்களவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. கோரக்பூர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் உபேந்திர தத் சுக்லாவை சுமார் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன் குமார் நிஷாத் தோற்கடித்தார்.

கோரக்பூர் தொகுதியில் கடந்த ஐந்து முறையும் நடந்த தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது. புல்புர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரை சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சியின் நாகேந்திர பிரதாப் சிங் தோற்கடித்தார். இந்த தொகுதியும் பா.ஜ.க வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

புல்புர் தொகுதியில் வெற்றி பெற்ற சமாஜ்வாடி வேட்பாளர்