செய்திகள்

பா.ஜ.க. தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் விசாரணை

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி: 

டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இதன் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சோதனை நடத்தினர். இதையடுத்து அது புரளி என கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்பை ஆய்வு செய்ததில், மைசூரிலிருந்து அழைப்பு விடுத்தது கண்டறியப்பட்டுள்ளது. 

SCROLL FOR NEXT