அகமது பட்டேல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது எடுத்தப் படம் 
செய்திகள்

வெட்கங்கெட்டத்தனத்தின் உச்சக்கட்டம்: பாஜக மீது காங்கிரஸ் பாய்ச்சல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்காக வெட்கங்கெட்டத்தனத்தின் அனைத்து எல்லைகளையும் பாஜக மீறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநில அரசியலில் திடீர் திருப்பமாக தேவேந்திர பட்னாவிஸ் அம்மாநிலத்தின் முதல்வராக மீண்டும் இன்று பதவியேற்றார்.
 
இந்நிலையில், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மும்பையில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்களிடையே பேசிய காங்கிரஸ் மேலிட தலைவர் அகமது பட்டேல் கூறியதாவது:-

கூட்டணி ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி தாமதப்படுத்தியதாக கூறப்படுவது தவறான தகவலாகும். ஜனநாயகத்தை சிதறடித்துவிட்டு தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள இந்த நாள் மகாராஷ்டிரா மாநிலத்தின் வரலாற்றில் கருப்புதினமாகும்.