செய்திகள்

போலீசார் அடக்குமுறையை கண்டித்து திருவனந்தபுரத்தில் நாளை பா.ஜ.க. முழு அடைப்பு

கேரள முதல்வர் வீட்டை முற்றுகையிட சென்றவர்கள் மீது போலீசார் நடத்திய அடக்குமுறையை கண்டித்து திருவனந்தபுரத்தில் நாளை முழு அடைப்புக்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது. #BJPshutdown #Trivandrumshutdown #BJPworkers

மாலை மலர்

சபரிமலை பகுதியில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை நீட்டித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநில சட்டசபையில் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவனந்தபுரம் நகரில் நேற்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட சென்ற பா.ஜ.க.வினர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.