செய்திகள்

புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் கோவில் நடை திறக்க அனுமதிக்க கூடாது: எச்.ராஜா

புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் கோவில் நடைதிறக்க அனுமதிக்க கூடாது என்று பா.ஜனதா செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தி இருக்கிறார்.

மாலை மலர்

சென்னை:

ஆங்கில புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் கோவில்கள் நடை திறப்பதற்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது.

நள்ளிரவில் கோவில் நடை திறப்பதற்கு தடை கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் தடை விதிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.

இந்த நிலையில் பா.ஜனதா செயலாளர் எச்.ராஜா புத்தாண்டு தினத்தில் கோவில் நடைதிறக்க அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஜனவரி-1 ஆங்கில புத்தாண்டு என்றால் இளைஞர்கள் மது அருந்து வீதிகளில் கலாட்டா செய்வது சகஜமாகி உள்ளது.

எனவே காவல்துறை இரவு 1 மணிக்கு மேல் யாரும் கொண்டாடக்கூடாது என்று அறிவித்துள்ளது. அதேபோல் நள்ளிரவில் கோவில்களை திறந்து வைத்திருப்பதும் ஆகம விதி மீறலாகும். எனவே தமிழக அரசு நள்ளிரவில் கோவில்களை நடை திறப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.