திப்பு ஜெயந்தி 
செய்திகள்

கர்நாடகாவில் திப்பு சுல்தான் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்தது எடியூரப்பா அரசு

கர்நாடகாவில் அரசு சார்பிலான திப்பு சுல்தான் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்தது எடியூரப்பா அரசு.

மாலை மலர்

தற்போது கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டு எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. நேற்றுதான் சட்டசபையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபித்தார்.

இந்நிலையில் திப்பு ஜெயந்தி விழா ரத்து செய்யப்படுகிறது என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  விராஜ்பெட் எம்எல்ஏ கேஜி போபையா எடியூரப்பாவுக்கு திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். இதன் அடிப்படையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.