கோப்புப்படம் 
செய்திகள்

உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற மேல்சபை எம்.எல்.ஏ. பதவிக்கு பா.ஜ.க.வினர் 10 பேர் வேட்புமனு தாக்கல்

உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற மேல்சபை எம்.எல்.ஏ. பதவிக்கு பா.ஜ.க. சார்பில் 10 பேர் சட்டமன்ற மேல்சபை தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

லக்னோ:

உத்தரபிரதேசத்தில் 12 சட்டமன்ற மேல்சபை எம்.எல்.ஏ.க்கள் பதவி காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்கு நாளை மறுதினம் (21-ந்தேதி) தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கடந்த 15-ந்தேதி சமாஜ்வாடி கட்சி சார்பில் 2 பேர் இந்த பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே நேற்று ஆளும் பா.ஜ.க. சார்பில் 10 பேர் சட்டமன்ற மேல்சபை தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் செய்தனர். அப்போது முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மாநில பா.ஜ.க. தலைவர் சுவேந்திர தியோ சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

12 மேல்சபை எம்.எல்.ஏ.க்கள் பதவிக்கு 12 பேர் மட்டுமே இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதால் அனைவருமே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT