புதுச்சேரி:
புதுவை தனியார் மருத்துவ கல்லூரியில் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுவையில் உள்ள 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 6 அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பதவி விலக கோரி புதுவை மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் செல்வ கணபதி, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை தலைவர்கள் ஏம்பலம் செல்வம், துரை கணேசன், செல்வம், மாநில செயலாளர்கள் அருள்முருகன், சாய்.சரவணன், முருகன், ஜெயந்தி, லட்சுமி, மாவட்ட தலைவர்கள் சிவானந்தம், மோகன்குமார், மூர்த்தி, சக்திபாலன், பாபு, அணி தலைவர்கள் மவுலிதேவன், விஜயலட்சுமி, ஆறுமுகம், அனீப், பிரிவு தலைவர்கள் மோகன்குமார், உமாபதி, புகழேந்தி, வக்கீல் அசோக்பாபு, பாஸ்கர், ஜெயலட்சுமி, சரவணன், குமார் மற்றும் அணி பொறுப்பாளர்கள், மாவட்ட, அணி நிர்வாகிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.