நிதின் கட்கரியுடன் பிப்லப் குமார் தேப் 
செய்திகள்

திரிபுராவின் முதல்வராகிறார் பிப்லாப் குமார் தேப் - துணை முதல்வராக ஜிஷ்னு பர்மன் தேர்வு

திரிபுராவில் ஆட்சியமைக்க உள்ள பா.ஜ.க சார்பில் மாநில கட்சியின் தலைவர் பிப்லாப் குமார் தேப் முதல்வராகவும், ஜிஷ்னு தேப் பர்மன் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். #Tripura #BiplabKumarDeb

மாலை மலர்

அகர்தலா:

திரிபுரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க 35 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், மாநில பா.ஜ.க தலைவராக உள்ள பிப்லாப் குமார் தேப் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். 

துணை முதல்வராக ஜிஷ்னு தேப் பர்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று அல்லது நாளை கவர்னரை சந்தித்து ஆட்சியமைப்பதற்கான உரிமையை பிப்லாப் குமார் தேப் கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜிஷ்னு தேப் பர்மன்

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்த பிப்லாப் குமார் தேப் டெல்லியில் ஜிம் மாஸ்டராக பணியாற்றி வந்தார். பின்னர், தீவிர அரசியலில் இறங்கி தற்போது மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். #Tripura #BiplabKumarDeb #TamilNews