நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் நேற்று கேள்வி நேரத்தில் பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி இணைய வழிகளில் பயன்படுத்தப்படும் ‘பிட்காயின்’ உள்ளிட்ட மின்னணு வழிமுறை நாணயம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அவர், “இணைய வழி நாணயத்தை பயன்படுத்துவதில் உலக அளவில் இந்தியா 11 சதவீதத்தை கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு தற்போது புழக்கத்தில் காணப்படும் பிட்காயின், எதிரியம் போன்ற மின்னணு வழிமுறை நாணய பரிமாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு பரிசீலனை செய்து வருகிறதா?” என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, “இதில் மத்திய அரசின் நிலைப்பாடு இந்த வகை நாணயங்கள் சட்டப்பூர்வமானவை அல்ல என்பதுதான். இது தொடர்பான அனைத்து விஷயங்களையும் செயலாளர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான குழு ஆய்வு செய்து வருகிறது. அந்த குழு பரிந்துரை செய்வதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.