செய்திகள்

துணை வேந்தர்கள் நியமனம்: பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா தாக்கல்

துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை:

தமிழக சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களாக காவல்துறை மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று இரு சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தார்.

அதில் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் நியமிப்பதற்கான தகுதி குறித்தும், அவர்களது நியமனத்துக்காக தேர்வு குழு அமைப்பது குறித்தும் அதில் விளக்கப்பட்டு இருந்தது.

கடந்த மே மாதம் கவர்னரால் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெறும் வகையில் சட்டசபையில் இன்று சட்ட மசோதா தாக்கலானது.