பிரதமர் மோடி, இந்தியாவில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.
இந்த திட்டத்தின்படி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி நாட்டில் தூய்மை பாதுகாப்பை அடைவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
இந்த சாதனைக்காக பிரதமர் மோடிக்கு புகழ் பெற்ற அமெரிக்க தொழில் அதிபர் பில்கேட்ஸ், மெலிந்தா அறக்கட்டளையின் ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.